அதிகரிப்பு தொடர் திருட்டு, வழிப்பறியை தடுக்க இரவு ரோந்துபாதுகாப்பு பணி போலீசார் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு
தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளை உடைத்து திருடுவது, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தடுக்க இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தவும், பாதுகப்பு பணியில் ஈடுபடும் போலீசார் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளையடிப்பது, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழனிசெட்டிபட்டி, போடி, அல்லிநகரம், பெரியகுளம் தென்கரை உள்ளிட்ட போலீஸ் எல்லைக்குள் திருட்டு வழிப்பறி சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. சில வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்தாலும் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிவதில் சுணக்கம் நிலவுகிறது. இதற்கு காரணம் பல போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனால் போதிய அளவில் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
குற்றவாளிகள் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டும், நகருக்கு அருகே உள்ள விரிவாக்க பகுதிகளை குறிவைத்தும் திருட்டு, கொள்ளை சம்பவம் நடத்துவது வாடிக்கையாக வைத்துள்ளது. பழனிசெட்டிபட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஊருக்கு சென்ற போது திருட்டு நடந்தது. சில மாதங்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்த பேராசிரியர் வீடு, அல்லிநகரம் பகுதியில் டாக்டர் வீடு உள்ளிட்ட இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ஆண்டிபட்டி மொபைல் போன் வழிப்பறி தினமும் நடக்கிறது. ஒரு மாதத்திற்கு முன் நிருபரின் அலைபேசியை பறித்து கொண்டு டூவிலரில் தப்பிய வழிப்பறி திருடர்கள் பற்றி போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேனி மருத்துவக்கல்லுரியில் ஒரே நாளில் 20 அலைபேசிகள் திருடுபோனது. டாக்டரின் டூவீலரும் திருடுபோனது. இத் திருட்டை கண்டுபிடிக்க போலீஸ் ஆர்வம் இல்லை.
இரவு 11:00 மணிக்குள் கடைகள் மூட உத்தரவு
குற்றங்களை தடுக்க தேனி சப் டிவிஷன் பகுதியில் இரவு 11:00 மணிக்குள் கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடவும், இரவில் ஆட்டோ ஓட்டுபவர்களை கண்காணிக்கவும், வெளியூர் ஆட்டோக்கள் வந்தால் அதுபற்றிய தகவல் தெரிவிக்கவும், சில நாட்களுக்கு சோதனை முயற்சியாக இந்த நடைமுறை பின்பற்ற உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீசார் கூறுகையில், மாவட்டத்தில் சப்-டிவிஷன் வாரியாக தனிப்படை செயல்படுகிறது. குற்ற சம்பவங்களை தடுக்க இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் சாதரண உடையிலும் ரோந்து பணியில் ஈடுபடவும்,போலீஸ் சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் செயல்படுகிறாத என்பதையும் ஆய்வு செய்யப்பட உள்ளது என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!