ADVERTISEMENT
ஆண்டிபட்டி: வைகை ஆற்றில் நீர் வரத்தால் குன்னூர் ஆற்றில் குடிநீர் உறை கிணறுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி, தேனி ஊராட்சி ஒன்றியங்களுகுட்பட்ட பல கிராமங்களுக்கு குன்னூர் ஆற்றில் இருந்து உறை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது. குன்னூர் ஆற்றில் மணல் பாங்கான இடத்தில் அமைக்கப்பட்ட உறை கிணறுகளில் சுரக்கும் நீரை மோட்டார் மூலம் பம்பு செய்து சுத்திகரிக்கப்பு செய்யாமல் வினியோகிக்கின்றனர்.
மழை காலத்தில் ஆற்றில் நீர் வரத்து ஏற்படும்போது ஆற்றுநீர் உறைகிணற்றில் நேரடியாக கலந்து விடுகிறது.
இதனால் உறை கிணற்றில் உள்ள நீர்மூழ்கி மோட்டாருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
தற்போது வைகை அணை நீர்மட்டம் கூடுதலாக இருப்பதால் நீர்த்தேக்க பரப்பு குன்னூர் ஆறு வரை பரந்து விரிந்துள்ளது. இதனால் உறை கிணறுகள் பலவும் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளன. பாதிப்படைந்த குடிநீர் உரை கிணறுகள் குடிநீர் வாரியம் மூலம் சரி செய்யும் பணி நடந்து வருகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!