சங்கத்தில் டிவிடெண்ட் தொகை வழங்காததால் போலீசார் ஏமாற்றம்
பெரியகுளம்: போலீஸ் கூட்டுறவு சங்கத்தில் டிவிடெண்ட் கிடைக்கும் என எதிர்பார்த்த போலீஸ்காரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய ஐந்து சப்-- டிவிஷன்களுக்கு உட்பட்ட 31 போலீஸ் ஸ்டேஷன்கள், இரண்டு புறக்காவல் நிலையங்கள் உள்ளது. இதில் பணியாற்றும் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை தேனி என்.ஆர்.டி., நகரில் செயல்படும் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 600க்கும் அதிகமானோர் உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கடனாக வழங்கப்படுகிறது.
கடன் வழங்கும் பகுதியில் 10 சதவீதம் பிடித்தம் செய்து கடன் முடியும் தருவாயில் அசலில் வரவு வைத்து கணக்கு முடிக்கப்படும். சம்பளத்தில் பிடித்தம் செய்து வரவு வைப்பதால் வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது. தீபாவளி செலவிற்கு டிவிடெண்ட் வழங்க வங்கியில் ரூ. 3 கோடி பட்டுவாடா செய்யப்படும் என போலீசார் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதில் ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பணம் கிடைக்கும்.
தீபாவளி பண்டிகை கிடைக்கும் என எதிர்பார்த்தும் கிடைக்காததால் போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.-
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!