ஒரு தேங்காய் ரூ.33 ஆயிரத்திற்கு ஏலம்
போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி தேவசேனா சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.
கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது.
இதில் போடியை சேர்ந்த மதன் வீரன், சிவக்குமாரி என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
சிவகுமாரி ரூ.35 ஆயிரம் வரை ஏலம் கேட்டார். மதன் வீரன் ரூ.36 ஆயிரத்துக்கு ஒரு தேங்காயை ஏலம் எடுத்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!