ADVERTISEMENT
ஆண்டிபட்டி: வைகை அணை போலீஸ் ஸ்டேஷன் அருகே வைகை அணை நீர் பாசன துறைக்கு சொந்தமான வணிக வளாக கட்டடம் பயன்பாடு இன்றி பூட்டி உள்ளது. வைகை அணை பூங்கா கட்டப்பட்ட போது இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வணிக வளாகம் கட்டப்பட்டது.
ஓட்டலாக செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் இன்றி சில ஆண்டுகள் மூடிக்கிடந்தது. இந்நிலையில் சமீபத்தில் ரூ.6 லட்சம் செலவில் கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கட்டடத்தை வணிக பயன்பாட்டிற்கு கொண்டு வர வைகை அணை நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!