தாய், மகனை தாக்கியவர் கைது
சங்கராபுரம : சங்கராபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி பச்சையம்மாள். இவரது மகன் தயாளன், 36; திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த வாரம் தயாளன் சொந்த ஊர் வந்தபோது, அவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்குமிடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த விஜயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர் மணிமாறன் ஆகியோர் சேர்ந்து தயாளனைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தட்டிக் கேட்ட தயாளனின் தாய் பச்சையம்மாளையும் தாக்கினார்.
புகாரின் பேரில் சங்கராபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!