கம்பம் -- நாராயணத்தேவன்பட்டி இடையே தார் ரோடு அமைக்கப்படுமா
கம்பம்: கம்பம் - நாராயணத்தேவன்பட்டி செல்ல பயன்படும் வீரப்ப நாயக்கன் குளத்து ரோட்டை, தார் ரோடாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பத்திலிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்ல காமயகவுண்டன்பட்டி சென்று பின் அங்கிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்ல வேண்டும்.
அல்லது கம்பத்திலிருந்து சுருளிப்பட்டி சென்று பின் அங்கிருந்து நாராயணத்தேவன்பட்டி செல்ல வேண்டும். இரண்டு ரோடுகளின் வழியாக செல்லும் போது குறைந்து 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும்.அதை தவிர்க்க 20 ஆண்டுகளுக்கு முன்பு கம்பத்திலிருந்து வீரப்ப நாயக்கன்குளக் கரை வழியாக செல்ல ரோடு அமைக்கப்பட்டது.இந்த வழியாக சென்றால் 5 முதல் 10 நிமிடங்களில் சென்று விடலாம். தற்போது மண் ரோடாக உள்ளது. மழை காலங்களில் டூவிலர்களில் செல்ல முடியாது. நடந்து செல்வதும் கடினம். எனவே 2 கி.மீ. மண் ரோட்டை, தார் ரோடாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!