ADVERTISEMENT
கம்பம்: சுருளி அருவியில் கட்டிய கடைகள், பூங்கா சுற்றுலா பயணிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படாமல் முடங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் சுற்றுலா தலங்களில் முதன்மையானது சுருளி அருவியாகும்.
இங்குள்ள அருவியில் குளிக்க தினமும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வனப்பகுதிக்குள் அருவி உள்ளதால் நீரில் மூலிகை தன்மை உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. ஒட்டல், கடைகள், இருக்கை வசதி, குடிநீர், பூங்கா ஆகியவை போதிய எண்ணிக்கையில் இல்லை. சுத்தமான கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் இல்லை.
இந் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா வனத்துறையால் அமைக்கப்பட்டது. சூழல் சுற்றுலா பெயரில் வனத்துறை இந் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கட்டப்பட்ட கடைகள், பூங்காவை பூட்டியே வைத்துள்ளனர். பல லட்சம் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. கடைகளையும், பூங்காவையும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த எதற்காக அனுமதிக்கவில்லை என்பது தெரியவில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுத்து கடைகள், பூங்காவையும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!