Load Image
Advertisement

தாய் இறந்த துக்கத்தில் டிரைவர் தற்கொலை



தேனி: தேனி வளையபட்டி பெருமாள்கோவில் தெரு கார் டிரைவர் மோகன்ராஜ் 48. இவரது மனைவி அமுதா, மகன்கள் அரவிந்த், அஸ்வின். ஒரு வருடத்திற்கு முன் மோகன்ராஜ் கணையம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் இவரது தாயார் மரணமடைந்ததால் கவலையில் இருந்தார். இந்நிலையில் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இருப்பதாக மகன் அஸ்வினுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த அமுதா மது போதையில் இருந்த மோகன்ராஜை வீட்டிற்கு அழைத்து சென்றார். வீட்டில் மோகன்ராஜ் வாந்தி எடுத்தார். அவரை போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர் விஷமருந்தி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர் இறந்துவிட்டார். மகன் அஸ்வின் புகாரில் தேனி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement