த.ம.மு.க ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலையை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் பாலா, குமார், இளைஞரணி தலைவர் ராஜபாண்டியன், இணைச்செயலாளர் பிரசாத், விவசாய அணித்தலைவர் செல்லபாண்டி நிர்வாகிகள் பாண்டி, பிரசாத் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!