உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் முறைகேட்டை கண்டித்து ரோடு மறியல்
பெரியகுளம்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதில் முறைகேடுகளை கண்டித்து பெண்கள் லட்சுமிபுரத்தில் ரோடு மறியல் ஈடுபட்டனர்.
பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பத்து மகளிர் சுய உதவி குழுக்கள், தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ. 50 லட்சம் கடன் வழங்க மகளிர் திட்டம் உத்தரவு பிறப்பித்தது. குழுக்களுக்கு தனி நபர் கடன் வழங்காமல் மொத்தமாக ரூ.50 லட்சம் ரூபாயை மகளிர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் பணத்தை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்காமல் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய லட்சுமிபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், எருமலைநாயக்கன்பட்டி மகளிர் சுய உதவிக் குழு தலைவர் பாண்டிச்செல்வி தலைமையில் விளக்கம் கேட்டனர்.
இதில் திருப்த்தி அடையாமல் தேனி -லட்சுமிபுரம் ரோட்டில் 10 நிமிடம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தென்கரை இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, மொத்த ரூபாயை கொண்டு சென்றவர்களை போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தின் பேரில் ரோடு மறியல் கைவிட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!