வறுமை காரணமாக பெண் குழந்தையை தத்து மையத்தில் ஒப்படைக்க வந்த பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்தனர்
தேனி: வறுமை காரணமாக பிறந்து 3 மாதம் ஆன பெண்குழந்தையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க பெற்றோர் வந்தனர். குழந்தை அரசு தத்து வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவல் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இந்துமதி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் முரளி பங்கேற்றனர்.
க.புதுப்பட்டி ராஜா 38, அவரது மனைவி மகேஸ்வரி பிறந்து மூன்று மாதமான பெண் குழந்தையுடன் கலெக்டரிடம் மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
ஒன்னரை வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது பெண்குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகிறது. குடும்ப வறுமையால் குழந்தையை ஒப்படைக்க வந்தோம்' என்றனர். கலெக்டர் அதிகாரிகளை அழைத்து குழந்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் கூறுகையில், 'குழந்தையை ஒப்படைக்க வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆவணங்களை எடுத்து வர கூறி உள்ளோம். குழந்தையை அரசு தத்து வளர்ப்பு மையத்தில் சேர்க்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். குழந்தைகளை கொடுத்து 60 நாட்களுக்குள் அவர்கள் குழந்தை மீண்டும் வளர்க்க விரும்பினால் வாங்கி செல்லாம். என்றனர்.
எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த சில பெண்கள் கலெக்டரிடம் மனு வழங்கி கூறுகையில், மகளிர் திட்டத்தில் தங்கள் சுயஉதவிக் குழுவிற்கு வங்கி வழங்கிய கடனுதவியை ஊராட்சியில் பணிபுரியும் ஒரு பெண்ணும், மற்றொரு பெண்ணும் கையாடல் செய்ததாக புகார் கூறினர். தனக்கு பாதுகாப்பு இல்லை என மகளிர் திட்டத்தில் சி.பி.சி.,யாக பணிபுரியும் பெண்ணும் மனு அளித்தார். கந்து வட்டியால் பறிபோன வீடுஉத்தமபாளையம் வடக்குபட்டி பேச்சியம்மாள் மனுவில், சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினேன். அப்போது எழுதாத பேப்பரில் கையெழுத்திட்டு எனது வீட்டு பத்திரத்தை வழங்கினேன். கடன் கொடுத்தவர் இறந்து விட்டார். அவரது மகன் எனது வீட்டை பெயர் மாற்றி கொண்டனர்.
கடன் கொடுத்தவரின் உறவினர்கள் வீட்டை காலி செய்ய மிரட்டு கின்றனர். எனது வீடு, வீட்டு பத்திரத்தை மீட்டுத்தர கோரினார்.
சுருளிபட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் மணிகண்டன் மனுவில், ஊராட்சியில் நடந்த முறைகேடு புகாரில் ஊராட்சி தலைவர் நாகமணியை தகுதி நீக்க கூட்டம் 2023 மார்ச்சில் நடந்தது.
கூட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!