கணவர் இறந்த துக்கம் மூதாட்டி தற்கொலை
பெரியகுளம்: கணவன் இறப்பால் பிரிவை தாங்க முடியாத மனைவி மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம் அருகே வடுகபட்டி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் தலைமை ஆசிரியர் பழனியாண்டி 88. உடல்நிலை சரியில்லாமல் நவ.13ல் இறந்தார்.
கணவரின் பிரிவால் மனைவி புஷ்பம் 86. மன வேதனையில் இருந்தார். பிள்ளைகள் ஆறுதல் கூறினர்.
புஷ்பம் நவ.16ல் அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இறந்தார்.
தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!