தொழிலாளி சாவு
திட்டக்குடி : கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரசக்குறிச்சியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அருள்மணி, 23; கடலுார் மாவட்டம், கொடிக்களம் கிராமத்தில் பாலுசாமி என்பவர் வீட்டிற்கு கட்டட வேலை செய்ய, கடந்த 16ம் தேதி வந்தார்.
18ம் தேதி இரவு அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் அருள்மணி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த அருள்மணியின் மனைவி சிவசங்கரி,20; மற்றும் குடும்பத்தினர், அருள்மணியின் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அருள்மணிக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகியுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!