ADVERTISEMENT
வடமதுரை: வடமதுரை பிலாத்து வாலிசெட்டிபட்டியில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்த்தம் அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தது.
நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
பிலாத்து வரதராஜப் பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் பூபதிசர்மா, செந்துறை மேலப்பெருமாள் கோயில் அர்ச்சகர் திருவேங்கடம் அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர்.
வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், ஒன்றிய பொருளாளர் செந்தில்முருகன், மாவட்ட இலக்கியஅணி அமைப்பாளர் இளங்கோ, கமிட்டி நிர்வாகி பழனிச்சாமி பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!