இருதரப்பு மோதல் 4 பேர் படுகாயம்
திட்டக்குடி, :lதிட்டக்குடி அடுத்த மேலுாரை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி உஷா, 40; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்,56, ரெங்கநாயகி,45, அமுதவள்ளி,44, ஆகியோருக்குமிடையே நிலத்தில் தண்ணீர் செல்லும் வாய்க்கால் பிரச்னை உள்ளது.
நேற்று இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதில் உஷா, ராஜலட்சுமி, அமுதவள்ளி, ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர்.
உஷா கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன், ரெங்கநாயகி, அமுதவள்ளி மீதும், அமுதவள்ளி கொடுத்த புகாரில் உஷா, ராஜலட்சுமி, மணிகண்டன், கல்விக்கரசி ஆகிய ஏழு பேர் மீது ஆவினங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!