ADVERTISEMENT
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடப்பாண்டு, 27வது ஆண்டு கார்த்திகை சோமவார விழா நேற்று நடந்தது.
பால், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தன. விழாவிற்கான ஏற்பாட்டை செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் நான்கு தெருவார் தோப்பு வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு நிருத்யாலயா நடன பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல, புதுப்பாளையம் தெரு ருத்ரகோடீஸ்வரர் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சோமவார சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!