விவசாயி வெட்டிக்கொலை
நத்தம்: -நத்தம் அருகே எல். வலையபட்டியை சேர்ந்த விவசாயி சின்னையா 45. இவர் நவ.18ல் இரவு தனது வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது இவரை மர்ம நபர்கள் வெட்டினர். காயமடைந்து ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சின்னையா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் சின்னையா நேற்று இறந்தார்.
நத்தம் போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள் குறித்து விசாரிக்கின்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!