ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், 2,224 பயனாளிகளுக்கு 11.5 கோடி ரூபா்் மதிப்பில் கடன்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு அமைச்சர் வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை அமைச்சர் பார்வையிட்டு, விழா கொடியை ஏற்றினார். தொடர்ந்து, கூட்டுறவு வார உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், 1 கோடியே 73 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் 14 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 சரக்கு வாகனமும், 1 டிரோனும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 29 கூட்டுறவு சங்கங்களுக்கு, சிறந்த கூட்டுறவு நிறுவனத்திற்கான விருதையும், கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, டாப்செட்கோ கடன், சுய உதவிக் குழு நேரடி கடன், மாற்றுத் திறனாளி கடன், விதவை மற்றும் கனவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் கடன் என 2,224 பயனாளிகளுக்கு 11 கோடியே 5 லட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டது.
மேலும், கூட்டுறவுத்துறை தொடர்பாக நடந்த போட்டிகளில், சிறப்பிடம் பிடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
விழாவில், எஸ்.பி., மோகன்ராஜ், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (பொறுப்பு) யசோதாதேவி, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, கள்ளக்குறிச்சி சரக துணைப் பதிவாளர்கள் சுகுந்தலதா, சுரேஷ், கீர்த்தனா, மணிமேகலை, நகர மன்ற தலைவர் சுப்ராயலு மற்றும் ஒன்றிய சேர்மன்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!