விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல்: மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. தனியார் கலைப்பட்டறை மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் மது,போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் நாட்டுப்புற பாடல்கள், நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி வரை திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!