ADVERTISEMENT
கும்மிடிப்பூண்டி, : கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ராமசந்திராபுரம் பகுதியில், தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் ஆலை சில மாதங்களாக மூடி உள்ளது. அதில் நேபாளத்தை சேர்ந்த பாபின் குருங், 26, என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
அவருடன் அவரது மனைவி அமிகா குருங், 21, வசித்து வந்தார். நேற்று முன்தினம், மொபைல் போனில் ஆண் ஒருவருடன் அமிகா பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதனால் சந்தேகம் அடைந்த பாபின், அமிகாவை கண்டித்து தகராறு செய்து விட்டு வெளியில் சென்றார்.
இரவு வீடு திரும்பியபோது, மனைவி அமிகா துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவன் திட்டியதால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!