ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : பூசப்பாடி கிராமத்தில் திருடுபோன கோவில் சிலைகளை மீட்டு தரக்கோரி, மக்கள் தேசம் கட்சியினர் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் துரை தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் அளித்துள்ள மனு:
சேலம் மாவட்டம், ஊனத்துார் கிராமம், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூசப்பாடி கிராமத்தில் குலதெய்வ கன்னிமார் கோவில் உள்ளது.
கோவிலுக்குச் செல்லும் வழித்தடத்தில் உள்ள பஞ்சமி நிலத்தை ஆதிதிராவிடர் அல்லாத பிற சமூகத்தினர் ஆக்கிரமித்து இரும்பு வேலி அமைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சுவாமி வழிபாடு செய்ய இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.விதிமுறை மீறி பஞ்சமி நிலத்தை மற்ற சமூகத்தினர் பட்டா பெற்றது தொடர்பாக வழக்கு தொடர்ந்து, அதன் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவிலில் உள்ள சிலைகளை திருடுதல், உள்ளிட்ட செயல்களில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.எனவே, பஞ்சமி நிலங்களை மீட்டு தகுதியுள்ள ஆதிதிராவிட மக்களுக்கு வழங்குவதுடன், கன்னிமார் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, திருடுபோன சிலைகள், சூலாயுதங்களை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!