Load Image
Advertisement

சேதமடைந்த மழைநீர் வடிகால் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்

 Risk of accident in Sriperumbudur due to damaged rainwater drains    சேதமடைந்த மழைநீர் வடிகால் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்
ADVERTISEMENT


ஸ்ரீபெரும்புதுார், : சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், அணுகு சாலை ஓரம் மழைநீர் செல்ல, கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வடியும் மழைநீர், சாலையோரம் உள்ள வடிகால்வாய் வழியாக செல்லும்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில், தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் சில இடங்களில் உடைந்த நிலையில் உள்ளது.

இதனால், அணுகு சாலையில், காஞ்சிபுரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக, இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர், உடைந்துள்ள மழைநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கால்வாயை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement