தலைவர்கள் தினவிழா
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் தியாகிகள் தினவிழா தெற்கு ரத வீதி பஜனை மட அலுவலகத்தில் மன்ற பொருப்பாளர் சரவணனர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் பழனியப்பன் வரவேற்றார்.
பொது செயலாளர் காளிதாஸ் பேசினார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். நிர்வாகிகள் சங்கரன், சரவணன், திருமுருகன், பாலாஜி, நாகரத்தினம், பாண்டி, வைரவேல் பங்கேற்றனர்.
சுதந்திர போராட்ட தியாகிகள் வ.உ.சி., லாலா லஜபதிராய், சித்ரஞ்சன்தாஸ், பிர்சாமுண்டா, ஆச்சார்ய கிருபாளனி திருவுறுவ படங்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!