கிரிக்கெட் லீக் போட்டி: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும் மாவட்ட அளவிலான டேக்-டி.டி.சி.ஏ., முதல் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான டேக்-டி.டி.சி.ஏ., போட்டி திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்தது. பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 35.1 ஓவரில் 112 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. ராஜதுரை 48ரன்கள், ஆஷிக் ஹாட்ரிக் சாதனையுடன் 5விக்கெட்டு எடுத்தார்.
சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் சி.சி. அணி 23.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 116ரன்கள் எடுத்து வென்றது. தீபன் 28, ஜெயந்த் 46 (நாட்அவுட்) ரன்கள் எடுத்தனர்.
திண்டுக்கல் ஸ்ரீ.வீ.கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் ஏ.எம்.சி.சி. அணி 47 ஓவரில் 9 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. காளீஸ்வரன் 36, முத்துகாமாட்சி 38, சாதிக் அலி 65(நாட்அவுட்) ரன்கள், திவாகரன் 3 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த திண்டுக்கல் ப்ளே பாய்ஸ் சி.சி. அணி 27.4 ஓவரில் 85 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. வெங்கடேஷ்வரன் 28ரன்கள், முத்துகாமாட்சி 5 விக்கெட் எடுத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!