ADVERTISEMENT
நத்தம்: -நத்தம் கோவில்பட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடந்த தீர்த்த அழைப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பகவதி அம்மன், அய்யனார் சுவாமி, சந்தன கருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி மேளதாளம் முழங்க தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. முன்னதாக நத்தம் கோவில்பட்டி பொதுமக்கள் கரந்தமலை சென்று புனித நீராடி பின் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தை மேளதாளம் முழங்க யானை, ஒட்டகம், அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக சந்தன கருப்பசாமி கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து அங்கிருந்து நத்தம் மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பகவதி அம்மன் கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு எடுத்து தரப்பட்டது. நவ.24 காலை 8:00 மணிக்கு மேல் 3 கோயில்களிலும் அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!