அ.தி.மு.க.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
நத்தம்: -நத்தம் வேம்பார்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நத்தம் குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துப்பட்டி, குப்பிளிபட்டி பகுதியை சேர்ந்த 20க்கு மேலான மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ராமராசு, மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய ஜே.பேரவை இணைச் செயலாளர் விஜயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிறுகுடி தினேஷ்குமார் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!