ADVERTISEMENT
சிதம்பரம், : ஸ்ரீமுஷ்ணம் அருகே பொது இடத்தை, முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணம் பக்கிரிமான்யம் ஊராட்சி துணைத் தலைவர் சங்கீதா தலைமையில், 60க்கும் மேற்பட்டோர், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், ஸ்ரீ முஷ்ணம் பக்கிரி மான்யம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தை, அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பட்டா வாங்கி யுள்ளார்.
அந்த இடத்தில், கால் நடை மருத்துவமனை கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என, கோரினர்.
மேலும், முறைகேடாக பட்டா மாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரினர்.
அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட சப் கலெக்டர் ஸ்வேதா சுமன், உரிய விசாரணை செய்து நடவடிக்கை
எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!