இலக்கிய தொடர் சொற்பொழிவு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ்ச் சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
சங்க சிறப்பு தலைவர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். தென்னாற்காடு மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆராவமுதன், திருக்குள் பேரவை தலைவர் பிரகாஷ், நெடுமானுார் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் அம்பேத்கர் வரவேற்றார். கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லுாரி தமிழ் பேராசிரியர் ஆனந்தி, முன்னாள் அரசு மருத்துவத்துறை இணை இயக்குனர் உதயகுமார், தமிழ் வழிக்கல்வி இயக்க தலைவர் சின்னப்பதமிழர் உட்பட பலர் இலக்கியங்கள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!