ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 498 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல் உட்பட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
மொத்தம் 498 மனுக்களை பெறப்பட்டன. மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!