வேளாண் அதிகாரிகள் ஆய்வு
வடலுார், : குறிஞ்சிப்பாடி பகுதியில் சம்பா நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 13,750 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக வெங்கடாம்பேட்டை, மருவாய், அயன் குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நெற்பயிரில் ஆந்திரா பொன்னி ரகத்தில் இலைச்சுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது.
இக்கிராமங்களில் விருத்தாசலம் அறிவியல் நிலைய தொழில்நுட்ப உதவி பேராசிரியர் நடராஜன், பூச்சியியல் நிபுணர் செங்குட்டுவன், வேளாண்மை உதவி இயக்குநர் மலர்வண்ணன் மற்றும் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!