ADVERTISEMENT
நெல்லிக்குப்பம் : கடலுார் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம், வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். முகாமில் முன்னோடி வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்று, மாணவர்களின் கல்வி கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கடன் வழங்கினர்.
நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரிசங்கர் ராவ், முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா உள்ளிட்ேடார் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் 67 மாணவர்களுக்கு ரூ. 2.14 கோடி கல்விக் கடன் மற்றும் பல்வேறு திட்டங்களில் 39 பயனாளிகளுக்கு ரூ. 3.28 கோடி தொழிற்கடன் காசோலையை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
பின்னர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், 'மாணவர்கள் உயர் கல்வி கனவை அடைவதற்கு பொருளாதாராம் ஒரு தடையா இருக்க கூடாது என்பதற்காக, கல்விக் கடன் முகாம் நடத்தப்பட்டது. முகாமில், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கல்விக் கடன் குறித்த புகார்களை 82487 74852 என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம்' என்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசுகையில், செக்யூரிட்டி இல்லாமல் கடன் வழங்க வேண்டுமென்ற அரசு உத்தரவை வங்கிகள் மதிக்க வேண்டும்.
அதேபோன்று, தள்ளுபடி செய்வார்கள் என நினைத்துக் கொண்டு கடனை திருப்பி செலுத்தாமல் இருக்க கூடாது. கடனை திருப்பி செலுத்தினால் தான் மற்றவர்களும் பயனடைய முடியும் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!