ADVERTISEMENT
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், கடந்த 13ம் தேதி கொடியேற்றம், நவவீரர்கள் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் உற்சவர் சுப்ரமணிய சுவாமி வீதியுலாவும், கடந்த 16ம் தேதி பச்சை போடுதல், 17ம் தேதி கம்பம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்வாக 18ம் தேதி சூரசம்ஹார விழா நடந்தது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர்.
விழாவின் கடைசி நாளான நேற்று இடும்பன் பூஜை நடந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!