ADVERTISEMENT
வேடசந்துார்: மினுக்கம்பட்டியில் ஓடை புறம்போக்கில் கட்டப்பட்ட 3 கோயில்களை இடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 2 கோவில்கள் இடிக்கப்பட்டது.
நேற்று மீதமுள்ள கருப்பண்ணசாமி கோயில் இடிக்கப்பட இருந்த நிலையில் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் 3 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
வி.புதுக்கோட்டை ஊராட்சி மினுக்கம்பட்டி ஓடை புறம்போக்கில் உள்ள வீடுகள், கோயில்களை இடிக்க கோரி அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புறம்போக்கில் உள்ள வீடுகள்,2 கோவில்கள் ஏற்கனவே இடிக்கப்பட்டது.
அங்குள்ள கருப்பண்ணசாமி கோயில் மட்டும் இடிக்கப்படாமல் உள்ளது.
இதை இடிக்கும் நோக்கில் நேற்று பழநி ஆர்.டி.ஓ., (பொறுப்பு) சிவக்குமார், தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மண் அள்ளும் எந்திரத்துடன் மினுக்கம்பட்டிக்கு சென்றனர்.
டி.எஸ்.பி., துர்கா தேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஊர் பொதுமக்கள் சார்பில் 3 நாள் கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து, அங்குள்ள ஓர் வளாகத்தில்
ஊர் முக்கியஸ்தர் நாகராஜ், வி.புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் குப்புசாமி சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடந்தது.
இதை தொடர்ந்து நவ.21, 22, 23 என 3 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதற்குள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று கோயில் கட்டடத்தை இடிக்காமல் இருக்கும் தடை ஆணை பெற வேண்டும். இல்லாவிட்டால் நவ.24ல் அதிகாரிகள் கோயிலை இடிக்கும் பணியை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!