Load Image
Advertisement

முன்னறிவிப்பின்றி நடத்திய விழாவால் பயனாளிகள்... அதிருப்தி; அவசர கதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் திறப்பு

Beneficiaries unhappy with unannounced ceremony; Opening of the apartment building in the emergency phase   முன்னறிவிப்பின்றி நடத்திய விழாவால் பயனாளிகள்... அதிருப்தி; அவசர கதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் திறப்பு
ADVERTISEMENT
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரகதியில் திறப்பு விழா நடந்ததன் மர்மம் என்ன என்ற கேள்விக்குறி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

உளுந்துார்பேட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு இல்லாதோருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. 3.01 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் இருந்து வாங்கி 400 சதுர அடியில் 24.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 264 குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இந்த குடியிருப்புகள் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போதே கட்டி முடிக்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், அதற்கான தொகை வங்கி காசோலையாக வழங்கியவர்களுக்கும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்குவதற்கான ஆணை அப்போதே வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு வீட்டின் சாவி மட்டுமே வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்து வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வீடு வழங்கியது செல்லாது எனக் கூறி தற்போது விண்ணப்பிப்பவர்களுக்கு வீடு வழங்கப்படும் என கூறப்பட்டு, அதற்கான முகாமை, கடந்த மே மாதம் 17ம் தேதி நடத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அதிலும் முழுமையாக விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி அமைச்சர் உதயநிதி காணொலி காட்சி மூலமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அன்று கலெக்டர், எம்.எல்.ஏ., ஆகியோர் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து, அடுக்குமாடி குடியிருப்புகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தடபுடலாக முன்னேற்பாடு பணி நடந்தது.

ஆனால் அன்று அமைச்சர் வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து திடீரென திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென குடியிருப்பு கட்டடம் திறப்பு விழா நடந்தது.

உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குத்து விளக்கேற்றி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து, வந்த வேகத்திலேயே புறப்பட்டுச் சென்றார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், டேனியல் ராஜ், குருமனோ, ராஜேஸ்வரி சரவணன் உட்பட ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

ஆனால் கலெக்டர், தாசில்தார் மற்றும் இதர துறை அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் என யாரும் பங்கேற்கவில்லை.

நிகழ்ச்சியில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கூட அழைப்பு விடுக்காமல் அவசர கதியில் ஆளுங்கட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்று திறந்து வைத்திருப்பது மர்மமாகவும், பயனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடு கிடைக்குமா.. பயனாளிகள் அச்சம்

திறப்பு விழா நிகழ்ச்சியே இப்படி அவசர கதியில் பயனாளிகள், அதிகாரிகள் இன்றி நடந்திருப்பதால், பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதிலும் குளறுபடி ஏற்படும் என்ற ஐயப்பாடு பயனாளிகளிடையே எழுந்துள்ளது. தங்களுக்கு எப்போது வீடு கிடைக்கும் என்ற அச்சத்துடனும், கேள்விக்குறியோடு பயனாளிகள் காத்திருக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement