Load Image
Advertisement

கட்டுப்படுத்துங்க: சமையல் காஸ் நிர்ணயித்த விலையை விட கூடுதல் வசூல்: துறை ரீதியான நடவடிக்கை மக்களுக்கு தேவை

 For city banner area... Controlling cooking gas more than fixed price People need departmental action    கட்டுப்படுத்துங்க:  சமையல் காஸ் நிர்ணயித்த விலையை விட கூடுதல் வசூல்: துறை ரீதியான நடவடிக்கை மக்களுக்கு தேவை
ADVERTISEMENT
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காஸ் நிர்ணயித்த விலையை விட டெலிவரி செய்யும் ஊழியர்கள் மக்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பதால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதைக்கட்டுப்படுத்த துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் தற்போது சமையலுக்காக காஸ் பயன்படுத்தாத ஆளே இல்லை என்ற அளவில் அதன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தேவைகளுக்கு ஏற்ப மக்கள் அதை தனியார் ஏஜென்சிகளிடம் அலைபேசி மூலம் பதிவு செய்து பெற்று கொள்கின்றனர். ஒருசிலர் பதிவு செய்த உடன் நேரில் சென்று தங்களுக்குரிய காஸ் சிலிண்டரை டூவீலர்,கார்களில் வைத்து தாமே வீடுகளுக்கு கொண்டு வந்து பொருத்துகின்றனர். இதுபோன்று செய்யமுடியாத வயதானவர்கள்,பெண்கள் காஸ் சிலிண்டர்களை பதிவு செய்து வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கின்றனர். மற்றவர்களுக்கு சம்பந்தபட்ட ஏஜென்சிகளின் ஊழியர்கள் வீட்டிற்கு கொண்டு போய் டெலிவரி செய்கின்றனர். அப்படி வீடு வீடாக காஸ் டெலிவரியில் ஈடுபடும் ஊழியர்கள் காஸ் சிலிண்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். ஒருசிலர் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். மற்றவர்கள் கேள்வி கேட்டால் மரியாதை இல்லாமல் காஸ் ஏஜென்சி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை திட்டுகின்றனர். தொடரும் இப்பிரச்னையால் மக்கள் அதிகமானோர் வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே குமுறுகின்றனர். இதைத்தடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

.........

அவதிப்படுகிறோம்

சமையல் எரிவாயு காஸ் தற்போது எல்லா மக்களும் பயன்படுத்தாத ஒன்றாக உள்ளது. அரசு நிர்ணயித்த தொகை ரூ.950 அதை தாண்டி டெலிவரி செய்ய வருபவர்கள் கூடுதலாக வசூல் செய்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட் போட்டு தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற நிலையால் தொடர்ந்து அவதிப்படுகின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் மரியாதை இல்லாமல் பேசுகின்றனர். தொடரும் இந்நிலைக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை பலதரப்பில் புகார் செய்தும் பலனின்றி உள்ளது. பட்ஜெட் குடும்ப தலைவிகளுக்கு இந்த கூடுதல் வசூலிப்பு தொகை வேதனையை உண்டாக்குகிறது. சிலிண்டர் புக் செய்யும் முறை ஆன்லைனில் வந்து விட்டதை போல் அதற்குரிய பணமும் அதே முறையில் செலுத்த சிஸ்டம் கொண்டு வந்தால் மட்டுமே இந்த முறைகேடு தவிர்க்கப்படும். அதைவிட்டு கடைநிலை ஊழியர்களான டெலிவரி ஆட்கள் மீது குற்றம் சொல்வதால் மாற்றம் ஏதும் நிகழ போவதில்லை.

தனம், குடும்ப தலைவி, திணடுக்கல்.

...........................................................



வாசகர் கருத்து (2)

  • S.RAMANI - CHENNAI,இந்தியா

    நான் புக் செய்தால் எடை போட்டு வாங்குவேன் டெலிவரி பாய ரூபாய் முப்பது அதிகம் வாங்குவார் குடுப்பேன் எனக்கு வயது அறுபத்தி இயைந்து போய் வாங்கமுடியாது .

  • sasikumar - madurai,இந்தியா

    வணக்கம், நான் ஆன்லைனில் தான் பணம் செலுத்துகிறேன் கடந்த ஒரு வருடமாக... பணம் கேட்கத்தான் செய்கிறார்கள்... நான் கொடுப்பதில்லை... மீறி கேட்டால் புகார் செய்வேன் என்று கூறியதும் கிளம்பி விடுகிறார்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement