ஜிப்மர் மருத்துவமனை 27ம் தேதி இயங்காது
புதுச்சேரி : குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு, வரும் 27ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குருநானக் பிறந்த தின விழா, குருநானக் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் 27 ம் தேதி குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஜிப்மர் மருத்துவமனை வரும் 27 ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'வரும் 27 ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது.எனவே அன்றைய தினம் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்கவும். இருப்பினும் அவசர சிகிச்சை சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்' என கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!