ADVERTISEMENT
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில், துணை தாசில்தார் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம், 42; மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில், துணை தாசில்தாராக (தேர்தல் பிரிவு) 3 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்று பணி செய்து வந்தார்.
இதற்கு முன் செஞ்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்தார். இவர், நேற்று காலை 11:00 மணிக்கு மேல்மலையனுாரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
வளத்தி போலீசார் விசாரித்ததில், வயிற்று வலியால் விஷம் குடித்து இறந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவரது மனைவி லட்சுமி, 37; அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் பெண்ணும் உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!