சிறப்பு முகாமில் 6 ஆயிரம் புதிய வாக்காளர்கள் ஆர்வம்
மதுரை: மதுரை மாவட்டத்தில்நடந்த சிறப்பு முகாமில்6 ஆயிரம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. சிறப்பு முகாம் நவ.,4,5ல் நடந்தது. 10 சட்டசபை தொகுதிகளிலும் முதல்நாள் முகாமில் 5248 பேரும், 2ம் நாள் 5984 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 232 பேர் விண்ணப்பித்தனர். இதில் புதிய வாக்காளர்களாக விண்ணப்பித்தோர் 6297 பேர்.
மேலுார் தொகுதியில்1134 பேர், சோழவந்தானில் 1305, மதுரை வடக்கு 1122, மதுரை தெற்கு 1228, மதுரை மத்தி 1225, மதுரை மேற்கு 650, திருப்பரங்குன்றம் 861, திருமங்கலம் 439, உசிலம்பட்டி 1318 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
'இரண்டாவது கட்ட சிறப்பு முகாம் நவ.,25, 26ல் நடக்கிறது. அதில் புதிய வாக்காளர்,திருத்தம், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்' என தேர்தல்தாசில்தார் ேஹமா தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!