மயான வசதி கோரி மறியல்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஏ.ஆண்டிபட்டியில் பட்டியலின மக்களுக்கு முறையான மயான வசதி இல்லை.
இங்குள்ள ரோட்டோரம் திறந்த வெளியில் இறந்தவர்களை எரியூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மயானத்திற்கு இடம் வழங்க தொடர்ந்து கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று முதியவர் வெள்ளையன் இறந்தார். அவரது உடலை ரோட்டோரம் எரியூட்ட வாகனத்தில் எடுத்து வந்தனர். பின் உடலை இறக்கி வைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மயான வசதி செய்து தருவதாக சமரசம் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!