சுற்றுலா துறையினருக்கு முன்பதிவு செய்ய அழைப்பு
மதுரை: தமிழக அரசு மாநில சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கையாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குவோர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக www.tntourismtors.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேற்கூறியவர்கள் முறையான உரிமம் பெறவதற்கு தங்கள் முன்பதிவை உடனே மேற்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மதுரை மேலவெளிவீதியில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் (0452 2334 757 அல்லது இ மெயிலில் touristofficemadurai@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!