ADVERTISEMENT
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோவில், 7 ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, 19ம் தேதி, காலை 9:00 மணிக்கு மகா ேஹாமத்துடன் விழா துவங்கியது. 11:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் உள்ளிட்ட அனைத்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
11:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!