மதுரை: மதுரை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மகளிர் பிரிவு டேக்வாண்டோ போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளி ஏற்பாடுகளை செய்தது.
14 வயது பிரிவு
16 கிலோ எடை பிரிவில் செயின்ட் சார்லஸ் மாணவி தேஜஸ்வினி முதலிடம் பெற்றார். 18 கிலோ பிரிவில் சிறுமலர் பள்ளி கீர்த்திகா முதலிடம், செயின்ட் சார்லஸ் பள்ளி மதுமிதா 2ம் இடம், 20 கிலோ பிரிவில் சிறுமலர் பள்ளி பிரேமா முதலிடம், செயின்ட் சார்லஸ் விஷாலினி 2ம் இடம் இடம், டி.ராமநாதபுரம் அரசுப் பள்ளி தனலட்சுமி, சீத்தாலட்சுமி பள்ளி வர்ஷினி 3ம் இடம் பெற்றனர்.
22 கிலோ பிரிவில் மேக்கிலார்பட்டி அரசு கள்ளர் பள்ளி தனுஷியா முதலிடம், பாலமந்திரம் பள்ளி ஜாய் பிரசன்னா 2ம் இடம், செயின்ட் சார்லஸ் தனுஸ்ரீ, செயின்ட் ஜான்ஸ் பள்ளி சுபனிதா 3ம் இடம் பெற்றனர். 24 கிலோ பிரிவில் சிறுமலர் பள்ளி துவாரகா முதலிடம், செயின்ட் சார்லஸ் பள்ளி அனுஷா 2ம் இடம், செயின்ட் சார்லஸ் ஹரிணி, உறங்கான்பட்டி அரசுப் பள்ளி ஹர்ஷினி 3ம் இடம் பெற்றனர்.
26 கிலோ பிரிவில் சிறுமலர் பள்ளி மலைசெல்வி முதலிடம், சீத்தாலட்சுமி பள்ளி ஹர்ஷினி ஹர்ஷினி 2ம் இடம், கள்ளிக்குடி அரசுப் பள்ளி முத்துராகவி, செயின்ட் சார்லஸ் ஷிவானி 3ம் இடம் பெற்றனர். 29 கிலோ பிரிவில் சிறுமலர் பள்ளி முனீஸ்வரி முதலிடம், செயின்ட் சார்லஸ் பள்ளி கமலா 2ம் இடம், லட்சுமிபுரம் டி.வி.எஸ்., பள்ளி வர்ஷனா, செயின்ட் ஜான் பள்ளி ரோஷினி 3ம் இடம் பெற்றனர்.
32 கிலோ பிரிவில் நாவலர் சோமசுந்தரபாரதியார் மாநகராட்சி பள்ளி தேஜாஸ்ரீ முதலிடம், செயின்ட் சார்லஸ் பள்ளி தீபாஸ்ரீ 2ம் இடம், டி.வி.எஸ். பள்ளி யோகலட்சுமி, சீத்தாலட்சுமி பள்ளி தர்ஷினி 3ம் இடம் பெற்றனர்.
35 கிலோ பிரிவில் செயின்ட் சார்லஸ் பள்ளி ஸ்வேதா முதலிடம், செயின்ட் அனீஸ் பள்ளி முத்து ஈஸ்வரி 2ம் இடம், கஸ்துாரிபாய் காந்தி மாநகராட்சி பள்ளி வினோதினி, கள்ளிக்குடி அரசுப் பள்ளி அன்னலட்சுமி 3ம்இடம் பெற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!