ADVERTISEMENT
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மனம்தவிழ்ந்தபுத்துார் பகுதியில், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார்-சங்கராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பண்ருட்டி அடுத்த மனம்தவிழ்ந்தபுத்துார் கிராமத்தில், பொன்னங்குப்பம் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இவ்வழியாக அசுர வேகத்தில் வரும் வாகனங்கள், மோட்டார பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி விபத்துக்கள் நடந்து வருகிறது. சில ஆண்டுகளாக தொடர்ந்துவரும் வாகன விபத்துக்களில் பலர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழப்புகளும் அதிகம் நடந்துள்ளது.
மனம்தவிழ்ந்தபுத்துாரில் விபத்துக்கள் அதிகம் நடந்துவரும் இடமாக உள்ள பகுதியில், தற்போது முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, பால் கொள்முதல் நிலையம், திருமண மண்டபம் உள்ளிட்டவை இருந்து வருகின்றன. வி.கே.டி.சாலைக்கு மாற்று வழியாக கடலுார்-சங்கராபுரம் சாலையை வாகன ஒட்டிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து பிசியான சாலையாக இச்சாலை மறியுள்ளது. எனவே, இச்சாலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில், மனம்தவிழ்ந்தபுத்துார் பகுதியில் வேகக்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரவு நேரங்களில் விபத்து ஏற்படாமல் தவிர்க்க, இப்பகுதியில் ஒலி பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!