Load Image
Advertisement

போதிய மழையின்றி பெலாந்துறை அணைக்கட்டு... வறண்டது; சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

Belandara dam is dry without enough rain; Availability of water for samba cultivation is a problem   போதிய மழையின்றி பெலாந்துறை அணைக்கட்டு... வறண்டது; சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
ADVERTISEMENT
பெண்ணாடம் :வடகிழக்கு பருவமழை போதுமான அளவில் பெய்யாமல் பெலாந்துறை அணைக்கட்டு வறண்டுள்ளதால், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என, பெண்ணாடம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை - பெரிய கொசப்பள்ளம் கிராமங்களுக்கு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ல் பாசனத்திற்காக அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 12,234 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீரை பயன்படுத்தி கரும்பு, நெல், கேழ்வரகு மற்றும் தோட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும், டி.வி.புத்தூர், ராஜேந்திரப்பட்டிணம், ஆனந்தகுடி, கொக்கரசம்பேட்டை, குணமங்கலம், திருபுத்தூர், மேல் புளியங்குடி, வக்கரமாரி, ஸ்ரீ நெடுஞ்சேரி, பாளையங்கோட்டை ஏரி உள்ளிட்ட, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 18 ஏரிகள், பாசன கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறுகின்றன.

கடந்த 8 மாதங்களுக்கு முன் நீர்வளம் மற்றும் நிலவள திட்டம் நிதியில் ரூ. 7.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அணையின் பில்லர்கள், கரைகள், நீர்வரத்து பகுதிகளில் சிறுபாலங்கள், பக்கவாட்டு சுவர்கள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளாற்றில் கலக்கும் சின்னாறு, உப்பு ஓடை, ஆணைவாரி ஓடைகளின் வழியே வரும் வெள்ளநீர் பெலாந்துறை அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும். பொதுப்பணித்துறையின் பாசன ஏரிகளுக்கு கிளை வாய்க்கால் மூலம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் விவசாய பணிகள் தொய்வின்றி நடந்தது.

ஆனால், தற்போது அக்டோபர் முடிந்து நவம்பர் மாதமும் இறுதிக்கு வந்துள்ள நிலையில் அணைக்கு இதுவரை நீர்வரத்து இல்லை. இதனால், இப்பகுதி போர்வெல் நீர்மட்டம் குறைந்து விவசாய பணிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. தற்போது துவங்கிய சம்பா நெல் நடவுக்கும், வரும் ஜனவரி, பிப்ரவரியில் துவங்கும் குறுவை நெல் நடவு பணிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோன்று பெண்ணாடம் பகுதி கிராமங்களில் விவசாய பாசனங்களுக்கான பிரதான பொதுப்பணித்துறை ஏரிகளும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

பெலாந்துறை அணைக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பெலாந்துறை அணைக்கட்டு இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. அணை நீரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின்போது அணையில் தண்ணீர் நிரம்பி வழியும். ஆனால் தற்போது போதிய மழையின்றி உள்ளதால் சம்பா நடவு செய்த நாள் முதல் இதுவரை பயிர்களுக்கு மழைநீர் கிடைக்கவில்லை. முன்பட்ட சம்பா நெற்பயிர்களும் தண்ணீரின்றி கருகின. இதே நிலை தொடர்ந்தால், விவசாய பயிர்கள் வளர்ச்சி பாதித்து விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement