கேரளாவில் மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. திருச்சூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரியாக உள்ள கே.ஏ. பிந்து, அலுவலகத்தில் கிறிஸ்துவ பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர், கலெக்டரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சப் - கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. சப் -- கலெக்டர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பிந்துவை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து பிந்து கூறுகையில், 'நேற்று காலை அலுவலகத்துக்கு வந்ததும், சஸ்பெண்ட் உத்தரவு என்னிடம் தரப்பட்டது. உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்,'' என்றார்.
இது குறித்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறியதாவது: கடந்த செப்., மாதத்தில், இந்த பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அலுவலகத்தில் உள்ள தீய சக்தியை வெளியேற்றும் வகையில், கிறிஸ்துவ மத தலைவர் ஒருவரின் அறிவுரையின்படி, இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குறிப்பாக, குறிப்பிட்ட சில வாசகங்களை உச்சரித்தால், வேலை நெருக்கடி, மனப்பதற்றம் குறையும் என கூறப்பட்டதால், இந்த பிரார்த்தனை நடத்தப்பட்டது. அலுவலக வேலை நேரம் முடிந்ததும், மாலை, 5:30க்குத் தான் பிரார்த்தனை நடந்தது. இதனால் அலுவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தரப்பு வாதத்தை கேட்காமல் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (40)
கம்யூனிச அரசோ,திராவிட அரசோ,சங்கி அரசோ அனைத்து மக்களுக்கும் பொதுவா அரசு அலுவலகங்களில் தாங்கள் விரும்பும் சாமி படங்களை வைப்பதோ,கும்பிடுவதோ,பூசை,ஜெபக்கூட்டம் நடத்துவதோ தவறு. மடத்தனமானது.உங்கள் நம்பிக்கைகளை வீட்டோடு வைத்து விட்டுதான் வரவேண்டும்.
அலுவலகத்தில் ஸ்வாமி படங்கள் பொதுவாக வைத்து இருப்பார்கள்.கும்பிடுங்கள் என்று யாறையும் வற்புறுத்த மாட்டார்கள்.. அலுவலகம் நன்றாக இருக்கவேண்டும் என்று நீ நினைத்தால் மனதுக்குள் நீ விரும்பிய கடவுளை வேண்டிக்கொள்.. உலகம் முழுவதும் இதை தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.
டிராவிடா நம்ம்பிக்கையயை (இந்த மூடா நம்பிக்கையயை ) உள்ள மாது அவரின் வின்ஜ்யான அறிவு சார்ந்த எண்ணம் இப்படி
ஏன் சில கருத்துக்களுக்கும் மட்டும் ரிப்ளை காலம் மறைக்க பட்டு இருக்கிறது. எதனால் என்று சொல்லலாமா?
கிறித்துவமே ஒரு தீய சக்திதான்...