பள்ளி முதல்வன் திட்டம் துவக்கம்
மதுரை: மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வன் திட்டம் துவக்க விழா தலைமையாசிரியர் ேஷக் நபி தலைமையில் நடந்தது.
உதவி தலைமையாசிரியர் ஜாஹிர் உசேன் முன்னிலை வகித்தார். பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் நோக்கமான 'மாணவர்கள் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது' தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்தாண்டு 'வேலை வாய்ப்பு திறன்கள்' என்ற பாடத்தில் 'சென்டம்' மதிப்பெண் பெற்ற மாணவர் மாதவன் பாராட்டப்பட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!