Load Image
Advertisement

புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் முதலை ; தேடும் பணியில் வனத்துறை தீவிரம்

 Crocodile in Puducherry Uppanar Canal; The forest department is intensifying the search    புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் முதலை ; தேடும் பணியில் வனத்துறை தீவிரம்
ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில், பொதுமக்கள் பார்த்த முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி கருவடிக்குப்பம், லாஸ்பேட்டை பகுதியில் இருந்து வரும் சிறிய வாய்க்கால்கள் ஜீவா நகரில் இருந்து உப்பளம் வழியாக, 100 அடி அகல கழிவுநீர் (உப்பனாறு) வாய்க்காலாக கடலில் கலக்கிறது.

இந்த வாய்க்காலில், காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே உள்ள பாலம் கீழ் பகுதியில் நேற்று காலை 3 அடி நீளமுள்ள முதலை குட்டி ஒன்றை பொதுமக்கள் பார்த்தனர். சிலர் முதலையை மொபைலில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இதனால், முதலையை பார்ப்பதற்காக பாலம் மீது ஏராளமான பொதுமக்கள் கூடியதால், சத்தம் கேட்டு முதலை தண்ணீருக்குள் மூழ்கி மாயமானது.

காமராஜர் சாலை பாலம் மீது மக்கள் கூடியதால், டிராபிக் ஜாம் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

ஜான்குமார் எம்.எல்.ஏ., வனத்துறை அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, விரைவாக முதலையை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கூறினார்.

வனத்துறை வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி தலைமையிலான குழுவினர், வாய்க்கால் பகுதியை பார்வையிட்டனர். முதலை தென்பட்ட பகுதியை மையமாக வைத்து, சுற்றி இரும்பு வேலி அமைத்து, முதலை தேடும் பணியை துவக்க வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

வேலி அமைப்பதிற்கு முன்னதாக கரையோர பகுதியில் எங்கேனும் முதலை ஏறி உள்ளதா என வனத்துறையினர் தேடி வருகின்றனர்.வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி கூறுகையில் 'முதலையை பிடித்தால் தான் எந்த வகை முதலை, எப்படி வாய்க்காலுக்குள் வந்தது என தெரியவரும். முதலையை பிடிக்கும் பணி நடந்து வருகிறது' என தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement