சேடப்பட்டியில் படைப்புழு ஆய்வு
மதுரை: சேடபட்டி திருமாணிக்கம், மேலதிருமாணிக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழு தாக்குதல் குறித்து மதுரை வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சுரேஷ் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: விவசாயிகள் ஒரே நேரத்தில் விதைத்தால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். வரப்போரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் தீவனச் சோளத்தை விதைத்தால் அந்துபூச்சி நடமாட்டத்தை குறைக்கலாம். வரப்போரம், ஊடுபயிராக சூரியகாந்தி, எள், தட்டைப்பயறு விதைக்கலாம். பயிர் சுழற்சியை கடைப்பிடிக்க வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும் என்றார்.
வேளாண் அலுவலர் மணிமேகலை, துணை அலுவலர் பாண்டியன் ஏற்பாடுகளை செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!