வடமாநில தொழிலாளி கீழே விழுந்து சாவு
கடலுார் : கடலுார் அருகே மேம்பால கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி கீழே விழுந்து இறந்தார்.
விழுப்புரம்-நாகப்பட்டிணம் இடையே நான்கு வழிச்சாலை பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலுார் அடுத்த அன்னவல்லியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. மேம்பாலத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெக்மோகன் சாகு, 22; என்பவர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!